
மதுரை: சிவகங்கை ஆவின் திருப்புவனத்தில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் இருப்பதால் மதுரையில் அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும் என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் நீதிமன்றம் வந்திருந்தார். விசாரணை முடிந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அஜித்குமார் காவல் மரணம் வழக்கின் சாட்சிகளுக்கு திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து அச்சுறுத்தல் அளிக்கப்படுகிறது. இதனால் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேட்டோம். சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.