
பெருந்திட்ட வளாகப் பணிகள் முடியும் முன்பே திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்துள்ள நிலையில் ரூ.300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொய்வின்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் உண்டி யல் காணிக்கை மூலம் மாதந் தோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இவை தவிர அன்ன தானம், கோசாலை பராமரிப்புக்காக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்களிலும் பக்தர்கள் காணிக்கை இடுகின்றனர். மேலும், அன்னதானத்துக்கு நன்கொடை செலுத்துவதற்காக அமைக்கப்பட் டுள்ள பிரத்யேக கவுன்ட்டரிலும் பக்தர்கள் நன்கொடை செலுத்தி ரசீது பெறுகின்றனர். இவற்றின் மூலம் மாதந் தோறும் கோடிக் கணக்கில் வருவாய் வந்த போதும் பக்தர் களுக்கான வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பது பெருங்குறையாக இருந்தது.