
புதுடெல்லி: “நான் ஒரு பகுதிநேர நடிகர்; முழுநேர அரசியல்வாதி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. பாஜகவில் இணைந்த அவர், தொடர்ந்து கட்சிப் பணிகளை ஆற்றிவந்தார். 2014 முதல் 2024 வரை மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, 2024 தேர்தல் தோல்வியால் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். `கியூன்கி சாஸ் பி கபி பஹு தி: ரீபூட்' என்ற டி.வி. தொடரின் புரமோ நேற்று வெளியானது. அதில், ஸ்மிருதி இரானி நடித்துள்ளார். இந்தத் தொடரில் துளசி விர்வானி என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார்.