
மேட்டுப்பாளையம்: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விடுபட்ட பகுதிகளை இணைத்து அத்திக்கடவு – அவிநாசி இரண்டா வது திட்டம் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதய குமார், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்பி தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆனால், அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தில் எங்களுக்கு பாசன வசதி கிடைக்கவில்லை. எனவே, பவானி ஆற்றில் தடுப்பணை கட்டி பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் மேட்டுப்பாளையம் காரமடை பகுதி விடுபட்டுள்ளது. எனவே, விடுபட்ட பகுதிகளை இரண்டாம் திட்டத்தில் இணைக்க வேண்டும்.