
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
நடந்தது என்ன? கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. இதில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது.