• July 8, 2025
  • NewsEditor
  • 0

ஏப்ரல் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று, இப்போது மீண்டும் ஹெட்லைன்களில் இடம்பெற தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த ‘பரஸ்பர வரி’யின் மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. அவை, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

ஏப்ரல் மாதம், ட்ரம்ப் கொடுத்த 90 நாள் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, பல நாடுகள் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ட்ரம்ப்

இதன் விளைவாக, அந்த நாடுகளுக்கு வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தக் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் தான் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

ட்ரம்பின் அந்த டீலை பயன்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தாத 15 நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டது என்ன?

கடிதத்தில், அந்தந்த நாடுகளுக்கு விதிக்கப்பட உள்ள வரி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த நாடு அல்லது அந்த நாட்டின் தொழிற்சாலைகள் அமெரிக்காவிற்குள் பொருள்களை உற்பத்தி செய்வதாக இருந்தால், அவர்களுக்கு எந்தவொரு வரி விதிப்பும் இல்லை.

ஒருவேளை, அமெரிக்காவின் இந்த வரிக்கு, அந்த நாடுகள் எதிர் வரி விதித்தால், விதிக்கப்படும் வரியுடன் கூடுதலாக 25 சதவிகிதம் வரியை அமெரிக்கா அந்த நாட்டு பொருள்களுக்கு விதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த 15 நாடுகளும், அவர்களுக்கு விதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கப்பட்ட வட்டி விகிதங்களும்…

1. தென் கொரியா – 25 சதவிகிதம்;

2. ஜப்பான் – 25 சதவிகிதம்;

3. மியான்மர் – 40 சதவிகிதம்;

4. லாவோஸ் – 40 சதவிகிதம்;

5. தென் ஆப்பிரிக்கா – 30 சதவிகிதம்;

6. கஜகஸ்தான் – 25 சதவிகிதம்;

7. மலேசியா – 25 சதவிகிதம்;

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

8. துனிசியா – 25 சதவிகிதம்;

9. போஸ்னியா – 30 சதவிகிதம்;

10. இந்தோனேசியா – 32 சதவிகிதம்;

11. வங்காளதேசம் – 35 சதவிகிதம்;

12. செர்பியா – 35 சதவிகிதம்;

13. கம்போடியா – 36 சதவிகிதம்;

14. தாய்லாந்து – 36 சதவிகிதம்;

15. ஹெர்சகோவினா – 30 சதவிகிதம்.

இந்த மாதம் முழுவதும் இப்படி பல நாடுகளுக்கு ட்ரம்ப் கடிதங்கள் எழுதுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் இந்த நாடுகள் ஏதேனும் ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்கா உடன் மேற்கொண்டு விட்டால், இது குறைக்கப்படும்.

ஆனால், இப்போதைக்கு இந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம்பெறவில்லை. இதை ஜஸ்ட் மிஸ் என்று கூட சொல்லலாம்.

காரணம், இந்தியா அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

இந்தியாவை பொறுத்தவரை…

இந்தியா பால், விவசாயம் போன்ற பொருள்களின் மீதான வரி விதிப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மேலும், இந்த ஆகஸ்ட் 1-ம் தேதி என்று கொடுக்கும் அழுத்தத்திற்கு இந்தியா பயப்படாது என்று இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா உடனான ஒப்பந்த தகவல்களை சமர்பித்துவிட்டது. அதை அமெரிக்கா இப்போது ஆய்வு செய்து வருகிறது.

இந்தியா மீது கடந்த ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட 26 சதவிகித வரியை நீக்குவதற்கான சிறிய ஒப்பந்தமாக இது இருக்கும். பின்னர், பெரிய ஒப்பந்தம் ஒன்று போடப்படும் என்று கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *