
ZEE 5 ஓடிடியில் ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது.
இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார்.
இந்த வெப்சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 7) நடைபெற்றது.
அப்போது பேசிய சரவணன், ‘ பருத்தி வீரன் படத்திற்கு பிறகு எனக்கு அழுத்தமான ரோல் அமையவில்லை.
ஆனால் இதில் எனக்கு எந்த ஒரு ஆதங்கமும் இல்லை. இன்றைக்கு இந்த வெப்சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பைக் கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார்.
பருத்தி வீரன் மாதிரியே இந்த வெப்சீரிஸ் எனக்கு பெயரைத் தேடி தரும். இதில் நான் கடினமாக உழைத்திருக்கிறேன்.

எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இந்த சீரிஸ் இருக்கும். அதனால் இதில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.
‘சட்டமும் நீதியும்’ மிகப்பெரிய வெற்றி அடையும்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…