• July 8, 2025
  • NewsEditor
  • 0

பசுமை விகடன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து 2025, ஜூலை 11-ம் தேதி ‘லாபம் கொடுக்கும் காளான் வளர்ப்பு’ என்ற நேரடி பயிற்சியை நடத்த இருக்கிறது.

அறிவிப்பு

இந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பை தொடங்க எவ்வளவு இடம் தேவைப்படும், கொட்டகை அமைப்பது எப்படி, காளான் வளர்ப்பு பைகளை தயார் செய்யும் முறைகள், விதைகள் எங்கு கிடைக்கும், பேக்கிங் செய்வது எப்படி, சந்தைப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் நேரடி பயிற்சியின் மூலம் சொல்லிக் கொடுக்கப்பட உள்ளன. தோட்டக்கலை கல்லூரியின் பேராசிரியர்கள், ஏற்கெனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் இந்தப் பயிற்சியை வழங்க இருக்கிறார்கள்.

கல்லூரியில் உள்ள காளான் வளர்ப்பு கொட்டகையையும் பார்வையிடலாம். காளானில் என்னென்ன பொருள்களை தயாரிக்கலாம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டல் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

காளான் வளர்ப்பை பொறுத்தவரை 100 சதுர அடியிலிருந்தே கூட தொடங்கலாம். 600 சதுர அடியில் அமைத்தால் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது.

பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.

நாள்: 11-7-2025, வெள்ளிக்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (EDII),
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம்.

அறிவிப்பு

சிறப்பம்சங்கள்
காளான் வளர்ப்பதற்கான தொழில்நுட்ப முறைகள், நேரடி செயல்விளக்கம்.
காளான் குடில்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான வழிகாட்டல்கள்.

காளான் பெட்கள் தயார் செய்யும் முறைகள்.
காளான் பேக்கிங் முறைகள் மற்றும் சந்தைப்படுத்துதல்.
காளான் விற்பனைக்கான சந்தை வாய்ப்புகள்.
காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோரின் அனுபவ உரைகள்.
காளான் வளர்ப்பில் ஈடுபடுவதற்கான முதலீடு மற்றும் இடம் உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டல்கள்.

காளான் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களுக்கான வழிகாட்டல்கள்.

இன்னும்… இன்னும்..

க்யூ.ஆர் கோடு

பயிற்சி கட்டணம்: 1,200 ரூபாய்

(பயிற்சியில் நோட் பேட், பேனா, தேனீர் , சான்றிதழ், மதிய உணவு போன்றவை வழங்கப்படும்).

கட்டணம் செலுத்த க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் (கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பே.டி.எம்). கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும். மேலதிக விவரங்களுக்கு இதே எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

கூகுள் மேப் லிங்க்:

https://maps.app.goo.gl/sqPi38tLPubpxpcA7

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *