• July 8, 2025
  • NewsEditor
  • 0

‘முதல்ல ஃப்ரீ ஷோ.. அதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, படத்தை ரிலீஸ் செய்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்’ என்கிற புதியதொரு கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் மாலா மணியன்.

மாலா மணியன் தயாரிக்க குட்டி ரேவதி இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன், அக்ஷிதா, காளி வெங்கட் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சிறகு. பிரிக்க முடியாத இசையும் பயணமும்தான் கதைக்களமாம்.

படம் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி விட்டது.

மாலா மணியன்

இந்தச் சூழலில் படத்துக்கு தியேட்டர் கிடைக்குமா, தியேட்டர் கிடைத்தாலும் ரிலீசான படத்துக்கு வரவேற்பு கிடைக்குமா என்பன போன்ற ரிலீஸுக்கு முந்தைய ஏகப்பட்ட சந்தேகங்களைக் களைந்து பிறகு படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் மாலா.

இந்த கான்செஃப்ட் தொடர்பாக அவரிடம் பேசிய போது,

“இந்த டிஜிட்டல் யுகத்துல படத்துக்கான புரமோஷன் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயமா இருக்கு. ரீல்ஸ், ஷார்ட்ஸ் என சமூக ஊடக வழிப் பிரச்சாரங்கள் படத்தின் ரிசல்ட்டைத் தீர்மானிப்பதா இருக்கு.

இந்த வகையிலான விளம்பரங்கள் ஏற்கனவே செய்திருந்தாலும், நாங்க புதுசா ஒரு விஷயத்தைச் செய்து பார்க்கலாம்கிற முடிவுக்கு வந்திருக்கோம்.

விளம்பர உத்தின்னு சிலர் சொல்லலாம்!

அதாவது படத்தை முதல்லயே பொதுமக்களுக்கு இலவசமா போட்டுக் காட்டுவது. படம் பார்த்து முடிச்சதும் அவங்களுடைய கருத்தை, விமர்சனத்தையும் எடுத்துகிட்டு, அதை வச்சு படத்தை தியேட்டர்ல ரிலீஸ் செய்யலாமா, மக்கள் பணம் செலுத்திப் பார்க்க படம் தகுதியானதுதானா என்கிற முடிவுக்கு வருவதுங்கிறதுதான் அந்த விஷயம்.

சிறகு

‘சிறகு’ படத்துக்குதான் இந்த ஐடியாவை அப்ளை செய்து பார்க்கலாம்னு இருக்கோம். இந்த முடிவு கூட ஒரு விளம்பர உத்தின்னு சிலர் சொல்லலாம்.

ஆனா இதைச் செய்து பார்க்கிறது மூலமா பிராக்டிகலா சில நன்மைகளும் நிச்சயம் இருக்கு” என்றார்.

`சிறகு’ இம்மாதம் 23-ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் தினமும் சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள தாகூர் தியேட்டரில் இலவசமாகத் திரையிடப் பட இருக்கிறதாம்.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *