
புதுடெல்லி: கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விசாரணையின்போது, புதிய வக்பு சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் குழுக்களில் சேர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் மீது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மத்திய அரசு தாமாகவே முன்வந்து சர்ச்சைக்குரிய அம்சங்களை வழக்கு முடியும் வரை அமல்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திருந்தது. இதனால், சில அம்சங்களுக்கான தடையுடன் புதிய வக்பு திருத்த சட்டம் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.