
புதுடெல்லி: டெல்லியில் தனக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன் என்பது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து, டி.ஒய்.சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது மகள்கள் பிரியங்கா (16) மற்றும் மஹி (14) மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நோய்க்கு இந்தியாவில் மட்டுமல்ல. உலகின் எந்த இடத்திலும் மருத்துவ சிகிச்சை கிடையாது. அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வசதிகளை செய்து தந்துள்ளோம்.