• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக சுகா​தா​ரத் துறை​யில் காலி​யாக​வுள்ள செவிலியர்​கள், மருந்​தாளுநர்​கள், ஆய்வக நுட்​பநர்​கள்​ பணி​யிடங்​களை, மாவட்ட சுகா​தார சங்​கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்​கு​மாறு,தேசிய நலவாழ்​வுக் குழு​மம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக, தேசிய நலவாழ்​வுக் குழும திட்ட இயக்​குநர் மருத்​து​வர் அருண் தம்​பு​ராஜ், அனைத்து சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள், மருத்​து​வக் கல்​லூரி​களின் டீன்​களுக்கு அனுப்​பி​யுள்ள கடிதம்: சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத் துறை (டிபிஎச்), மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​ககம் (டிஎம்​எஸ்), மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) ஆகிய இயக்​குநரகங்​களில் காலி​யாக​வுள்ள செவிலியர், மருந்​தாளுநர், ஆய்வக நுட்​பநர் (3-ம் நிலை) பணி​யிடங்​களை நிரப்​புவது தொடர்​பாக, கடந்த மே 21 மற்​றும் ஜூன் 23-ம் தேதி​களில் துறை​சார் கலந்​தாய்வு கூட்​டத்தை துறை​யின் செய​லா​ளர் நடத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *