
இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சரித்திரத்தைத் தொடங்கி வைத்த பெருமை கொண்டது தென் தமிழகம்.
வீரம் நிறைந்த அதன் ரத்த சரித்திரத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்த புலித்தேவன், வீரபாண்டிய கட்ட பொம்மன், ஊமைத் துரை, மருது பாண்டியர்களைத் தொடர்ந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவனும் தன் உயிரைத் துறந்தார்.
தங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்பவர்களின் நிலை இதுதான் என்று எச்சரிக்கவே பெரிய உடையணத் தேவனையும் போராளிகள் 72 பேரையும் பினாங்கிற்கு ‘காலா பாணி’ என்றழைக்கப்பட்ட நாடு கடத்தலை ஆயுதமாக்கியது ஆங்கில அரசு.
இதனை டாக்டர் மு. ராஜேந்திரன் IAS, வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து `காலா பாணி – நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ என்ற பெயரில் நாவலாக எழுதியிருந்தார்.
அகநி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நாவல், 2022-ம் ஆண்டு சாகித்திய அகாடெமி விருது பெற்றது.
இந்த நிலையில், இந்நாவல் தற்போது ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது விகடன் பிளேயில் (Vikatan Play) 35 எபிசோட்களாக வெளிவந்திருக்கிறது.
காலா பாணி – நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை – கேட்க கிளிக் செய்க!
இதன் வெளியீட்டு வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதனை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட, எழுத்தாளர் அ.வெண்ணிலா, கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கவிஞர் மு.முருகேஷ் மற்றும் விகடனின் சீப் டிஜிட்டல் கண்டன்ட் எடிட்டர் எஸ்.கே. பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.