• July 7, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அவரது மனைவி பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கொண்டாடினர்.

இதில் கலந்துகொள்வதற்காக ஹைத்ராபாத் சென்றுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர் கான். அவரது வருகையால் விழா எமோஷனலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு மீரா எனப் பெயர் சூட்டினார் ஆமிர் கான்.

பெயர் சூட்டு விழாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் விஷ்ணு விஷால் – ஜ்வாலா கட்டா தம்பதி.

ஆமிர் கானின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, “எங்கள் ‘மீரா’!

இதற்கு மேல் என்ன வேணும்!

ஆமிர் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகியிருக்காது!

நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.

அழகான சிந்தனைமிக்கப் பெயருக்கு நன்றி!” எனப் பதிவிட்டிருந்தார்.

mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations

நடிகர் விஷ்ணு விஷால் அவரது இன்ஸ்டாகிராமில், “எங்கள் மீராவை அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் குழந்தைக்குப் பெயரிட ஹைத்ராபாத் வரை வந்த ஆமிர்கான் சாருக்கு மிகப் பெரிய ஹக். மீரா என்பது நிபந்தனையற்ற அன்பையும் அமைதியையும் குறிக்கிறது. ஆமிர் சாருடன் இன்று வரையிலான பயணம் மேஜிக்கலாக இருக்கிறது. எங்கள் குழந்தைக்கு அழகான பெயரை சூட்டியதற்கு நன்றி ஆமிர் சார்.” எனப் பதிவிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு முதல் காதலித்து, 2021-ல் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கம்.

கடந்த 2023ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஆமிர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஒன்றாக மீட்கப்பட்டனர். ஆமிர்கானின் மகள் இரா கான் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் – ஜ்வாலா கட்டா தம்பதி அழைக்கப்பட்டிருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருவரும் நல்ல நட்புறவில் நீடித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *