• July 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை அரசியலில் இருந்து மீண்டும் விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின்முறை மாநாட்டில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், “நாடார் சமுதாய மக்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதால் அரசியலில் நாடார் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது” என டச்சிங்காக பேசி இருப்பது ராஜேந்திர பாலாஜி வட்டாரத்தை திகிலுக்குள் தள்ளி இருக்கிறது.

ஜெயலலிதா அமைச்​சர​வை​யில் அவரது நம்​பிக்​கைக்​குரிய அமைச்​சர்​களில் ஒரு​வ​ராக இருந்​தவர் மாஃபா பாண்​டிய​ராஜன். 2016-ல் ஆவடி​யில் போட்​டி​யிட்டு அமைச்​ச​ரான இவர், 2021-ல் மீண்​டும் அதே தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோற்​றுப் போனார். இதையடுத்து சென்​னையை விட்​டு​விட்டு தனது சொந்த மாவட்​ட​மான விருதுநகர் மாவட்ட அரசி​யலுக்கு திரும்​பி​னார். இங்கு வந்​ததுமே உள்​ளாட்​சித் தேர்​தலில் விருதுநகர் நகர்​மன்ற தேர்​தலில் களப்​பணி​யில் இறங்​கி​னார். ஆனால், ராஜேந்​திர பாலாஜிக்கு பயந்து பெரும்​பாலான அதி​முக நிர்​வாகி​கள் பாண்​டிய​ராஜனை பார்த்​தாலே பயந்து ஓடி​னார்​கள்.
உட்​கட்​சிக்​குள் இப்​படி​யான குடைச்​சல்​கள் இருந்​தா​லும் 2024 மக்​களவை தேர்​தலில் விருதுநகரில் போட்​டி​யிட விரும்​பி​னார் பாண்​டிய​ராஜன். ஆனால், சமயம் பார்த்து தொகு​தியை தேமு​தி​க-வுக்கு தள்​ளி​விட்​டார் ராஜேந்​திர பாலாஜி. இதையடுத்​து, 2026 சட்​டமன்​றத் தேர்​தலில் விருதுநகரில் போட்​டி​யிடலாம் என பாண்​டிய​ராஜனுக்கு சமா​தானம் சொன்​னது அதி​முக தலை​மை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *