• July 7, 2025
  • NewsEditor
  • 0

ஏப்ரல் 2-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிற நாடுகள் மீது ‘பரஸ்பர வரியை’ அறிவிக்க, உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

இதனையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதியில் இருந்து அடுத்த 90 நாள்களுக்கு, இந்தப் பரஸ்பர வரி விதிப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் அமெரிக்கா உடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறப்பட்டது.

டொனால்டு ட்ரம்ப்

இந்த நிலையில், ட்ரம்ப் நேற்று கூறியுள்ளதாவது…

“உலக நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை முடிவடைய போகிறது. இதனையடுத்து, எந்த நாடுகளுக்கு, எவ்வளவு வரி விதிப்பு என்பது ஜூலை 9-ம் தேதி அறிவிக்கப்படும்”.

அந்த வரி விதிப்பு, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் அரசாங்கத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் கொடுத்த இந்தக் கால அவகாசத்தில், பேச்சுவார்த்தை நடத்தாத உலக நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட வரிகளே தொடரப்படும்.

பிரிக்ஸ் – 10% வரி!

பிரிக்ஸ் மாநாடு தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘BRICS-ன் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 சதவிகித வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளைக் கொண்டது பிரிக்ஸ்.

இந்தியா உடன் பேச்சுவார்த்தை நல்லப்படியாக நடந்து வருகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், ட்ரம்ப் கூறியுள்ள இந்த 10 சதவிகித வரி இந்தியாவிற்கும் வருமா என்பது ஜூலை 9-ம் தேதி தெரியவரும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *