
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான கருதுகோள்கள்! இத்தகைய சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியைத்தான் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ற அடையாளத்துடன் நாம் நடத்தி வருகிறோம்.