• July 7, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: நக்​சல் ஒழிப்பு நடவடிக்​கை​யில் மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர​மான நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நக்​சலைட்​கள் கண்​காணிப்பு பணிக்​காக ட்ரோன்​களை பயன்​படுத்​து​வது கண்​டறியப்​பட்​டது.

இது குறித்து தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில் உத்தர பிரதேசம் மது​ராவைச் சேர்ந்த விஷால் சிங் என்​பவர் நக்​சலைட்​களுக்கு ட்ரோன்​களை விநி​யோகம் செய்​தது கண்​டறியப்​பட்​டது. அவர் கடந்த மாதம் 29-ம் தேதி டெல்​லி​யில் கைது செய்​யப்பட்டார். அவரிடம் நடத்திய விசா​ரணையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவ்​வப்​போது அறி​முக​மாகும் நவீன ட்ரோன்​களை பிஹாரின் சக்​கர்​பந்தா -பச்​ரு​கியா வனப்​பகு​தி​யில் உள்ள நக்​சல் தலை​வர்​களுக்கு விநி​யோகித்த​து தெரியவந்தது. அதோடு வனப்​பகு​தி​யில் உள்ள நக்​சலைட் முகாம்​களுக்கே சென்று நக்​சலைட்​களுக்கு ட்ரோன்​களை இயக்​கு​வதற்​கான பயிற்​சி​யை​யும் இவர் அளித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *