• July 6, 2025
  • NewsEditor
  • 0

`தெய்வத்திருமகள்’ படத்தில் ‘நிலா வந்தாச்சு’ என எல்லோரையும் கவர்ந்து, ‘சைவம்’ படத்தில்  `அழகு அழகு’ என பாடலால் தமிழ் சினிமாவில் க்யூட் குழந்தை நட்சத்திரமாகப் பிரபலமானவர் சாரா அர்ஜூன். சமீபத்தில் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுதவிர 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இவரது அப்பா ராஜ் அர்ஜுன். பிரபல பாலிவுட் நடிகராவார். சாராவின் ஒன்றரை வயதில், அப்பா ராஜ் அர்ஜுன் – அம்மா தாய் சன்யாவுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தபோது விளம்பரப்பட இயக்குநர் ஒருவரின் கண்ணில் பட்டிருக்கிறார். அப்படித் தொடங்கியது சாராவின் விளம்பர நடிப்பு. அதைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் இயக்கிய விளம்பரப்படத்திலும் நடித்தார் சாரா.

சாராவின் தமிழ் படங்கள்

டீன் 13 – சாரா அர்ஜுன் – பிக் கேர்ள் ஆனதும் டைரக்ட் பண்ணுவேன்!

அதன்பிறகுதான் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். மம்முட்டியுடன் ‘தி கிரேட் ஃபாதர்’ , பாலிவுட்டில் ‘404’  என பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பெரிய பெண்ணாகி ‘இயக்குநராவதுதான் என் கனவு, இப்போவே கதை எழுத ஆரம்பித்துவிட்டேன்’ என்றெல்லாம் குழந்தையாக இருக்கும்போதே க்யூட்டாக பேட்டியளித்திருந்தார்.

இப்போது 20 வயதாகிவிட்டது சாராவிற்கு. பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் ‘Dhurandhar’ படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரன்வீர் கபூர் படத்தில்….

`குழந்தை நட்சத்திர’ புகழ் சாரா அர்ஜூனுடன் ஜோடி சேரும் ரன்வீர் சிங் – நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ்

ரன்வீர் சிங் 40வது பிறந்த நாளான இன்று (ஜூலை 6) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்.மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் திர்ல்லராக உருவாகியிருக்கும் இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *