
புதுடெல்லி: வாரிசினை முடிவு செய்ய 14வது தலாய் லாமாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு மத நடைமுறை என்றும், இது யாருடைய தனிப்பட்ட விருப்பத்துக்கும் உட்பட்டது அல்ல என்றும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்தார்.
இதுகுறித்து சூ ஃபீஹோங் வெளியிட்ட அறிக்கையில், ‘திபெத்திய புத்த மதத்தில் தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. 14வது தலாய் லாமா 700 ஆண்டு கால மரபின் ஒரு பகுதியாவார். தலாய் லாமா மரபு தொடர வேண்டுமா அல்லது முடிவடைய வேண்டுமா என்பதை ஒருதலைபட்சமாக யாரும் முடிவு செய்ய முடியாது. தலாய் லாமா மரபு அவரிடமிருந்து தொடங்கவில்லை, அவரிடமும் முடிவடையாது. அந்த முறையை ஒழிக்கவோ அல்லது தொடரவோ அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று அவர் கூறினார்.