
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சி.வி குமார் தயாரிப்பில் உருவான படம் ‘டைட்டானிக்’. இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருப்பதால், எப்போது வெளியிடுவீர்கள் என்று கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் “நீங்கள் ஏன் ‘டைட்டானிக்’ படத்தை இன்னும் வெளியிடவில்லை சி.வி.குமார் சார். இயக்குநர் ஜானகிராமன் மற்றும் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த படம் வெளியிடுவதற்கான தகுதியைக் கொண்டுள்ளது. இதுவொரு நல்ல படம் சார். எங்களை நம்புங்கள். இது நம் அனைவருக்கும் வெற்றியை தரும். தயவு செய்து உடனடியாக படத்தை வெளியிடுங்கள் சார்” என்று கலையரசன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவால் சமூக வலைதளத்தில் சலசலப்பு உருவாகி இருக்கிறது.