• July 6, 2025
  • NewsEditor
  • 0

இது பாட்டு ஏரியா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியிலிருந்து தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பாடகர்கள் நிறைய. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து வந்தது மீடியா மேசன் நிறுவனம். கடந்த ஆண்டு மீடியா மேசனுக்கும் விஜய் டிவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவாக, விஜய் டிவியிலிருந்து வெளியேறியது.

இதற்கிடையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி ‘சரிகமப’வுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. சொல்லப் போனால், ஒருபடி மேலே போய் ‘மீடியா மேசன் இல்லாத நிலையில் ‘சூப்பர் சிங்கர்’ இடத்தை ‘சரிகமப’ பிடித்து விட்டதாகக் கூட ஒரு பேச்சு உலாவிய‌து.

saregamapa

மியூசிக் ரியாலிட்டி ஷோ ஏரியாவில் ஜீ தமிழும் விஜய் டிவியும் இப்படி முட்டி மோதிக் கொண்டிருக்க, சன் டிவியிலோ இவற்றிற்கு ஈடு கொடுக்கும்படியான இசை நிகழ்ச்சி எதுவுமில்லை. இத்தனைக்கும் ஒருகாலத்தில் ‘பாட்டுக்குப் பாட்டு’, ‘சப்தஸ்வரங்கள்’ என தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தது சன்.

இந்தச் சூழலில்தான் மீடியா மேசன் நிறுவனம் சன் டிவியுடன் கை கோர்த்து ‘ டாப் குக்கு டூப் குக்கு’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை அங்கு தயாரிக்கத் தொடங்க, தற்போது ப‌ழைய ஸ்டைலில் ஒரு மியூசிக் ஷோவை ஏன் நாம் திரும்பப் பண்ணக் கூடாது என்கிற கேள்வி அங்கு எழுந்துள்ளதாம்.

இது தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் கூடத் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கும்பட்சத்தில் அதில் பிரபலமான இசையமைப்பாளர்கள், நடுவர்களை இறக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

அது போன வருஷம், இது இந்த வருஷம்..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வீரா’ தொடரின் ஹீரோயின் வைஷ்ணவி அருள்மொழியின் பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன் வந்தது. சமீப நாட்களாகவே இந்த சீரியல் நல்லபடியாக போய்க் கொண்டிருப்பதாக உற்சாகத்திலிருக்கும் சீரியலின் யூனிட் ஹீரோயின் பிறந்த நாளையும் செட்டில் கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்களாம்.

Vaishnavi Arulmozhi

மதுரையைச் சேர்ந்த வைஷ்ணவி சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்து இப்போது ஹீரோயினாகியிருக்கிறவர். வைஷ்ணவியின் பிறந்த நாளூக்கு ஒரு நாள் கழித்து அவரது அம்மாவின் பிறந்த நாளூம் வருவதால் ஒவ்வொரு ஆண்டுமே அன்றைய தினம் ஷூட்டிங் இருந்தால் செட்டில் மகளுக்கும் அம்மாவுக்கும் கேக் வெட்டி அசத்தி விடுகிறதாம் யூனிட்.!

Vaishnavi arulmozhi

‘இதில் இன்னொரு ஹைலைட் என்னன்னா, கடந்தாண்டு இந்த நேரமெல்லாம் ஏதோவொரு குழப்பத்துல இருந்த மாதிரி தெரிஞ்சது. இந்த வருஷம் உற்சாகமா புதுப் பிறந்த நாள் போல அன்னைக்கு உற்சாகமா இருந்தாங்க’ என்கின்றனர் அவரது சகாக்கள்.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *