
சென்னை: பெண் போலீஸாரை பாதுகாப்பு பணியில்அதிகம் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியது குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் 30-ம் தேதி காணொளி வாயிலாக மாவட்ட, மாநகர அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், பெண் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. போக்சோ குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களில் விரைவாக விசாரணை நடத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுதான் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.