
புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், சிப்ரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். ஒன்பது வயதில் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், மத்திய பிரதேசத்தின் பிண்டு மாவட்டம், ராவத்புராவில் உள்ள அனுமன் கோயிலில் தங்கி ஆன்மிக பிரச்சாரம் செய்தார்.
பின்னர் ராவத்புரா கிராமத்தில் 62 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட சிவன் கோயிலை கட்டினார். தற்போது அவர் ராவத்புரா சிவன் கோயிலின் மடாதிபதியாக உள்ளார். மேலும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல், நர்சிங், பார்மசி, ஐடிஐ கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.