
சென்னை: “இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.