
லிவர்பூல் கால்பந்து அணியின் வீரர் டியாகோ ஜோட்டா சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.
28 வயது போர்த்துகீசிய வீரரான ஜோட்டாவின் மரணம் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் மரணத்துக்குப் பிறகு லிவர்பூல் அணியின் உரிமையாளரான ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG), ஜோட்டாவின் மனைவி ரூட் கார்டோசோ மற்றும் அவர்களின் குழந்தைகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்க எடுத்த முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
லிவர்பூலுடனான ஜோட்டாவின் ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கான சம்பள தொகையையும் அவரது குடும்பத்துக்கு அளிப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அவரது குடும்பத்துக்கு 14 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் 140 கோடி ரூபாய் கிடைக்கும் என செய்திதளங்கள் குறிப்பிட்டுள்ளன.
Liverpool அணி சமீப காலமாக உள்ளூர் மற்றும் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில் முக்கிய தூணாக செயல்பட்டார் தியாகோ ஜோட்டா.
அவரது இறுதி சடங்கில் மொத்த லிவர்பூல் அணியினரும், முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். மைதானத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
DIOGO JOTA'S FUNERAL BEGINS IN PORTUGAL pic.twitter.com/jVQLFnRhvm
— Tefara prosperous (@am_tefara) July 5, 2025