
ரொம்ப பிசியாவே, ஓடிட்டு இருக்கிற இந்த வாழ்க்கையில நமக்கு கிடைக்கிற சிறிய நேரத்தை கூட ரொம்ப சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் audio books மாற்றிவிடுகிறது. பயணங்களில் உற்ற தோழனாக, நம் காலை நடைப்பயிற்சியில் நண்பனாக என நம் வாழ்க்கையின் ஒரு சகாவாக இருக்கிறது இந்த ஆடியோ புத்தகங்கள்.
அப்படி இந்த ஜூன் மாதத்தில் Vikatan Playயில் அதிகம் கேட்கப்பட்ட ஐந்து ஆடியோ புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.
சைத்தான்:
ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதாவால் 1992 ஆம் ஆண்டு தொடராக வெளிவந்தது.
ஐடி ஊழியராக பணியாற்றும் தினேஷ் என்ற இளைஞருக்கு மர்மமான முறையில் ஒரு குரல் கேட்கிறது. அவனை இயக்கும் அந்த குரலால் அவன் சிறைக்கு செல்லும் நிலைக்கு உள்ளாகிறான். இறுதியில் அந்தக்குரலை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே கதை.
மிகவும் சுவாரசியமான இந்த ஆடியோ புத்தகம் தான் ஜூன் மாதத்தில் வாசகர்களால் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் முதல் இடத்தை பிடிக்கிறது.
சைத்தான் – நாவலை கேட்க… இங்கே க்ளிக் செய்க…

மிளிர்கல்:
தமிழ்ச்சூழலில் மிகவும் முக்கியமான நூலாக விளக்கும் இரா முருகவேள் எழுதிய மிளிர்கல் நாவல் சிலப்பதிகார கதைகளின் வழி ஆபரணங்களின் மீதான அரசியல், உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல், பெருநிறுவனங்கள் எப்படி லாவகமான அரசை பயன்படுத்துகிறது என சமகால அரசியலின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.
அரசியலோடு கண்ணகியை தேடி பயணிக்கும் இந்த “ மிளிர்கல்” வாசகர்களின் பேராதர்வோடு அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ புத்தகமாக இரண்டாம் இடத்தில் மிளிர்கிறது.
மிளிர்கல் ஆடியோ புத்தகத்தை கேட்க, இங்கே க்ளிக் செய்க…

செம்பா:
பாண்டிய இளவரசியான செம்பா கொரியாவை ஆட்சி செய்திருக்கிறாள். உண்மைச்சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட இந்த நாவல் நாடு கடந்து எல்லோர் மனதையும் வென்றிருக்கிறது.
அதனாலயே அதிக வாசகர்களால் கேட்கப்பட்ட Audio Booksயில் செம்பா மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.
நீங்களும் செம்பா ஆடியோ புத்தகத்தை கேட்க கீழே மறக்காம இங்கே கிளிக் செய்யுங்கள்.

முசோலினி – ஒரு பேரழிவுக்காரனின் கதை!
சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த ஹிட் அடித்த தொடர், எழுத்தாளர் பாலுசத்யாவால் எழுதப்பட்ட முசோலினி ஒரு பேரழிவுக்காரனின் கதை.
அதிகார வெறியும் பசியும் கொண்ட முசோலினி இறந்த பின்னும் மக்களால் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட இத்தாலியின் சர்வதிகாரி பெனிட்டோ முசோலியின் ஹிஸ்ட்ரி கதைக்கு வாசகர்கள் நான்காம் இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.
ஜூன் மாதம் அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ புத்தகத்தில் நான்காம் இடத்தை பிடித்திருக்கும் இந்த தொடரை நீங்களும் கேட்க மறக்காதீர்கள்
முசோலினி ஒரு பேரழிவுக்காரனின் கதை தொடரை கேட்க, இங்கே க்ளிக் செய்க…

நெல்லை ஜமீன்கள்:
நெல்லை மண்ணில் ஜமீன்களாய் வாழ்ந்து வீழ்ந்தவர்களின் வரலாற்று கதையை நமக்கு படம்பிடித்து காட்டியிருக்கிறார் நெல்லையை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
வரலாற்றை அறிந்து கொள்ளும் சுவாரசியத்தன்மையை சற்றே குறைக்காமல், ஆர்வத்தை இந்த நெல்லை ஜமீன்கள் ஆடியோ புத்தகம் வாசகர்களால் கேட்கப்பட்ட Audio Booksயில் ஐந்தாம் இடத்தை பிடிக்கிறது.