
‘கரெக்டடு மச்சி’ (Corrected Machi) என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி என்பதால், அவரது அடுத்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், அவரோ நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.