
‘பன்னி’, ‘அதிர்ஸ்’, ‘தீ’ மற்றும் ‘மிரப்காய்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ஃபிஷ் வெங்கட். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக அவர் ‘காபி வித் எ கில்லர்’ படத்திலும், முன்னதாக ‘மா வின்ட காதா வினுமா’ மற்றும் சித்தூ ஜொன்னலகட்டவுடன் ‘டி.ஜே. தில்லு’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.
அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரது மகள் ஸ்ரவந்தி தெரிவித்திருந்தார்.
இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டு வந்தநிலையில், நடிகர் பிரபாஸ் 50 லட்ச ரூபாய் கொடுத்து உதவ முன்வந்திருக்கிறார்.
மாற்று சிறுநீரக ஏற்பாடு தொடங்கி, அறுவை சிகிச்சை வரை அனைத்திற்கும் தான் உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…