
நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு கதைப் பிடித்திருந்தால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? புரி ஜெகன்நாத் இயக்கும் படம் முழுவதும் ஆக்‌ஷனை கொண்டது. இதற்கு முன் இப்படியொரு படத்தில் நான் நடித்ததில்லை