• July 5, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யாவைச் சேர்ந்த பாக்ஸிங் வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா (Anastasia Luchkina) கிரிமியாவில் உள்ள டைகன் சஃபாரி பார்க் என்ற வன விலங்கு பூங்காவில் ஓராங்குட்டான் குரங்குக்கு ஈ-சிகரெட் புகைக்கக் கொடுத்தது கடுமையான எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது.

ரஷ்ய செய்திதளம் zamin.uz கூறுவதன்படி, ஈ-சிகரெட் புகைத்த குரங்கு அதனால் தொந்தரவுக்குள்ளாகி விசித்திரமாக நடந்துகொண்டுள்ளது.

Boxer Anastasia Luchkina

டானா என்ற அந்த ஓராங்குட்டான், பசி மறந்து, மற்ற குரங்குகளுடன் விளையாடாமல் ஒரே இடத்தில் கிடந்துள்ளது.

டானா குரங்குடன் சிகரெட்டைப் பகிர்ந்துகொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் குரங்கு சிலமுறை சிகரெட் புகைத்துவிட்டு மீண்டும் மீண்டும் கேட்பதைப் பார்க்க முடிகிறது.

2018ம் ஆண்டு முதல் டானா அந்த பூங்காவில் வளர்ந்துவருகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு கால்நடை மருத்துவர்கள் டானாவை சோதித்துள்ளனர்.

IUCN-ம் அழிந்து வரும் உயிரினங்களுக்கான சிவப்பு பட்டியலில் ஓராங்குட்டான் இனத்தைச் சேர்ந்த டானா குரங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாக்ஸிங் வீராங்கனையின் செயலை உலகம் முழுவதிலுமிருந்து விலங்குநல ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *