• July 5, 2025
  • NewsEditor
  • 0

இம்பால்: இனக்​கல​வரத்​தால் பாதிக்​கப்​பட்ட மணிப்​பூரில் கடந்த பிப்​ர​வரி​யில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. மாநிலத்​தில் அமை​தியை மீட்​டெடுக்​கும் முயற்​சிகளில் ஒன்​றாக, இனக் குழுக்​கள் மறைத்து வைத்​துள்ள ஆயுதங்​களை பாது​காப்பு படை​யினர் பறி​முதல் செய்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மணிப்​பூரில் தெங்​னவ்​பால், காங்​போக்​பி, சண்​டேல், சுராசந்த்​பூர் ஆகிய 4 மலைப்​புற மாவட்​டங்​களின் பல்​வேறு இடங்​களில் போலீ​ஸார் ஒருங்​கிணைந்த சோதனை மேற்​கொண்​டனர். இதில் 200-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்​கி​கள், 3 கையெறி குண்டு லாஞ்​சர்​களை கைப்​பற்​றினர். மேலும் 30 வெடிகுண்​டு​கள், 10 கையெறி குண்​டு​கள் உள்​ளிட்ட பெரு​மளவு வெடிபொருட்​களை பறி​முதல்​ செய்​தனர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *