
அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.