
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்றும் காலநிர்ணயம் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் இந்த உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் அதிமுகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், வா. புகழேந்தி, திண்டுக்கல் சூர்யமூர்த்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், கே.சி,நரேன் பழனிசாமி உள்ளிட்டபலர் மனு அளித்திருந்தனர்.