• July 5, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக கூறி, போலீஸார் தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர் என்று மதுரை மாவட்ட நீதிபதியிடம் அரசு மருத்துவர் சாட்சி​யம் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அடுத்த மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (27). நகை திருட்டு புகார் தொடர்​பான விசா​ரணை​யின்​போது, தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் இவர் உயி​ரிழந்​தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதி​மன்ற நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் விசா​ரணை நடத்​தி, அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *