
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக போலீஸார் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பெண்கள் குறித்தும், சைவம் – வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார். இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க பதிவுத் துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.