
மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகிவரும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் பல்டி.
வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது.
ஏற்கெனவே இந்த திரைப்படத்துக்கு நிலவும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ் சினிமாவின் இளம் சென்ஷேனாக வலம்வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர், இதில் பணியாற்றுவதன் மூலம் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆடியோ லேபிள் நிறுவனமான தின்க் மியூசிக் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “மோனே சாய், மலையாள சினிமாவுக்கு வரவேற்கிறோம்… இது இசை ஆழமாக நேசிக்கப்படும் இடம், இசைக் கலைஞர்கள் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகிறார்கள்! “பல்டி” திரைப்படத்தின் இசை மூலம் பார்வையாளர்களின் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பும் பாக்கியம் உனக்கு கிடைக்கட்டும்!” எனப் பதிவிட்டுள்ளனர்.
வீடியோவில் மோகன்லால் “மோனே சாய்… வெல்கம் டு மலையாளம் சினிமா” என அழைப்பது போன்ற குரலும், அவர் சாய் அபயங்கரின் மல்டி டி-சர்டை வைத்திருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
20 வயதேயாகும் சாய் அபயங்கர் தமிழ் சினிமாவில் பல பெரிய பட்ஜெட் படங்களில் கமிட் ஆகியிருப்பதுடன், தற்போது மலையாளத்திலும் கால் பதிக்கிறார்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் திரைப்படத்திலும், சூர்யாவின் கருப்பு திரைப்படத்திலும், பிரதீப் ரங்கநாதான் – மமிதா பைஜு நடிக்கும் டூட் படத்திலும் பணியாற்றி வருகிறார் சாய்.
அல்லு அர்ஜுன் – அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார் சாய் அபயங்கர்.