
சென்னை: “நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பரந்தூர் பகுதியில், விவசாய நிலங்களை அழித்துவிட்டுப் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும் விவசாயிகளும் ஏகனாபுரம் கிராமத்தில் வருடக்கணக்காகப் போராடி வருகின்றனர். போராடும் மக்களை தவெக சார்பாக நான் சந்தித்த மறுநாளே, பரந்தூர் பகுதி ‘மக்கள் பாதிக்காத வண்ணம்’ விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.