
புதுடெல்லி: தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உரியது என்றும், அவரது பக்தராக தான் இதை தெரிவிப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், “சீனாவின் அறிக்கைக்கு எதிர்வினையாற்ற நான் விரும்பவில்லை” என்றார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 4) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நான் தலாய் லாமாவின் பக்தர். தலாய் லாமாவைப் பின்பற்றுபவர்கள் உலகில் எங்கு இருந்தாலும், அவர்களின் விருப்பம் ஒன்றுதான். தனது வாரிசை தலாய் லாமாவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது. தலாய் லாமா விவகாரத்தில் எவ்வித குழப்பத்துக்கும் இடமில்லை.