
சென்னை: தமிழக அரசின் 2025-ம் ஆண்டுக்கான ‘தகைசார் தமிழர்’ விருதுக்கு இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார். இந்த விருது கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, ஆசிரியர் கி.வீரமணி மற்றும் முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.