
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்காக நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்தினை ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.