• July 4, 2025
  • NewsEditor
  • 0

‘தவெக செயற்குழுக் கூட்டம்!’

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார்.

‘விஜய் பேச்சு!’

“நம் எல்லாருடைய வாழ்வாதாரத்துக்கும் அடிப்படையா இருக்கிற விவசாயிகள் பக்கம் எப்போதும் நிற்போம்.

விஜய்

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கோம். பரந்தூர் பகுதியில் விளை நிலங்களை அழித்துவிட்டு விமானநிலையம் கட்டுவதை எதிர்த்து அந்த மக்கள் வருடக்கணக்காக போராடி வந்தனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து வந்தேன். மறுநாளே 1500 குடும்பங்கள் மட்டுமே அங்கே இருப்பதால்தான் அங்கே மக்கள் பாதிக்காத வண்ணம் விமானநிலையம் அமைப்பதாக அறிக்கை விட்டீர்கள்.

விஜய்
விஜய்

ஒன்னு விமான நிலையம் இருக்குன்னு சொல்லுங்க, இல்ல இல்லன்னு சொல்லுங்க. 1500 குடும்பங்கள்னா உங்களுக்கு சாதாரணமா போச்சா சி.எம் சார்? அந்த மக்களும் நம்ம மக்கள்தான? எதிர்க்கட்சியா இருந்தா மட்டும்தான் மக்கள் மேல அக்கறை இருக்குமா? மக்களின் முதல்வர்னு எப்படி நாக்கு கூசாம சொல்றீங்க?” என்றார்.

விஜய்
விஜய்

செயற்குழுவில் விஜய் தனியாக 2 தீர்மானஙகளை வாசித்திருந்தார். ஒன்று பா.ஜ.கவுக்கு எதிராக கடுமையான தீர்மானமாக இருந்தது. இன்னொன்று மேற்குறிப்பிட்டது. திமுகவுக்கு எதிராகவும் கடுமையாக பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *