
ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் போன்கால் பேச்சுவார்த்தை – இது சமீபகாலம் தொடர்கதை ஆகும்.
நேற்றும் ட்ரம்ப் – புதின் இருவரும் தொலைபேசியில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டதை விட, அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது தான் ஹைலைட்டான விஷயமாக தற்போது பேசப்பட்டு வருகிறது.
நேற்று, புதின் ‘ஸ்ட்ராங் ஐடியாஸ் ஃபார் நியூ டைம்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து, புதினுக்கு, ட்ரம்பிடம் இருந்து போன்கால் வந்துள்ளது.
உடனே புதின், “தயவு செய்து, என் மீது கோபம் கொள்ளாதீர்கள். நாம் இன்னும் நிறைய பேச முடியும் என்பது எனக்கு புரிகிறது. ஆனால், அவரை (ட்ரம்பை) காக்க வைப்பது சங்கடமாக இருக்கும். அவர் கோபப்படலாம்” என்று அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார்.