• July 4, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு விவேக் நகரில் இரு குடும்பத்தினர் இடையே பணம் சம்பந்தமான தகராறில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகராறு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருவதாக கூறப்படுகிறது. வெங்கடரமணி மற்றும் அவரின் மகன் சதீஷ் ஆகியோருக்கு சொந்தமான வீட்டினை இவர்களின் உறவினரான சுப்பிரமணியன் என்பவர் தீவைத்து கொளுத்த முயன்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

money

பார்வதி என்பவர் தனது மகள் திருமணத்திற்காக வெங்கடரமணியிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பலமுறை கேட்டும் கடனை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இந்த பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது.

திருமண விழாவில் சந்தித்தபோது, வெங்கடரமணி பார்வதியிடம் வாங்கிய கடன் குறித்து கேட்டிருக்கிறார்.

பார்வதியிடம் பணத்தை கேட்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியிருக்கிறது. இதை தொடர்ந்து அவர்களை பழிவாங்க திட்டமிட்ட அந்த குடும்பத்தினர், உறவினரான சுப்பிரமணியன் என்பர், வெங்கடரமணி வீட்டில் தீ வைக்கச் சென்றிருக்கிறார்.

வீட்டின் வெளியில் இருக்கும் காலனி ஸ்டாண்ட், படுக்கையறை ஜன்னல் மீது சுப்பிரமணியன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்து விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், யாருக்கும் காயமோ, பெரிய அளவில் பாதிப்போ ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த விவேக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவானதை கண்காணித்து, போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *