
புதுடெல்லி: புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபுதொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது" என்று கூறியிருந்தார்.