• July 4, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ரேஷன் கடைகளுக்கு கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருள்கள் வாங்கி வரவேண்டும்.

இல்லம் தேடி ரேஷன்

இதில் மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மட்டும் தங்களின் சார்பில் வேறு ஒருவரை ரேஷன் கடைக்கு அனுப்பி ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள விலக்கு அளிக்கப்பட்டது. எனவே, முதல்கட்டமாக இல்லம் தேடி ரேஷன் திட்டம் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள்களை வழங்க அரசு முடிவு செய்தது.

முதல்கட்டமாக சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. வரும் சுதந்திர தினம் அல்லது செப்டம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருள்கள் நேரடியாக வினியோகம் செய்யப்படலாம் என்றும், மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று விடும் என்றும் கூறப்படுகிறது.

இல்லம் தேடி ரேஷன்
இல்லம் தேடி ரேஷன்

வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை கொண்டு செல்லும் திட்டம் ஆந்திராவில் செயல்பாட்டில் இருந்தது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு இல்லம் தேடி ரேஷன் திட்டத்தை தொடங்கி செயல்படுத்த முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *