
பறந்து போ (தமிழ்)
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.
நகரத்தில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் சிறுவன், ஒருநாள் தந்தையுடன் வெளியில் செல்ல வாய்ப்புகிடைக்கிறது. தந்தை – மகன் இருவரும் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் பயணம் செல்லும்போது அவர்களுக்குள் என்னவெல்லாம் நடந்தது. மகன் அன்புவின் சேட்டைகள். அதனுள் இருக்கும் சுதந்திர குணம் என சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லுவதாக இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது. குழந்தையை வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கும் பெற்றோருக்கு அழுத்தமாக கருத்தை காமெடியாகச் சொல்லியிருக்கிறது இப்படம்.
3 BHK (தமிழ்)

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. நகரத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பம் சொந்த வீடு வாங்குவதற்குப் போராடுவதே இதன் கதைக்களம். அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
Phoenix (தமிழ்)

அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுமாக நடித்திருக்கும் திரைப்படம் ‘Phoenix’. வரலட்சுமி சரத்குமார், ‘சரோஜா’ சம்பத் ராஜ், தேவதர்ஷினி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். குத்துச்சண்டை வீராக இருக்கும் சூர்யாவின் திறமையை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரின் வெற்றியைத் தடுக்க அரசியல் பிரமுகராக இருக்கும் சம்பத் ராஜ் செய்யும் பிரச்னைகளே இப்படத்தின் கதைக்களம். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
அஃகேனம் (தமிழ்)

உதய்குமார் இயக்கத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், ரமேஷ் திலக், G M சுந்தர், பிரவீன் ராஜா, ஆதித்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஃகேனம்’. திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
குயிலி (தமிழ்)

P. முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி, தஷ்மிகா, புதுப்பேட்டை சுரேஷ், ஹலோ கந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குயிலி’. சோஷியல் ட்ராமா திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Jurassic World: Rebirth (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)

கரீத் எட்வார்டு இயக்கத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹெர்ஷாலா அலி, ஜொனாதன் பெய்லி, ரூபர்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Jurassic World: Rebirth’. மீண்டும் பிறந்து உலகிற்கு வரும் டைனோசர்களால் என்னவெல்லாம் நடக்கிறது என்கிற ஆக்ஷன், அட்வன்சர் திரைப்படமான இது இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…