• July 4, 2025
  • NewsEditor
  • 0

அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.

2021-ல் கருப்​பர் கூட்​டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாச​மாக சித்​தரித்​த​தாக சர்ச்சை வெடித்​து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்​திரன் உள்​ளிட்​ட​வர்​கள் கைது செய்​யப்​பட்​டார்​கள். இந்த விவ​காரத்​தைக் கையில் எடுத்த பாஜக கடுமை​யாக எதிர்​வினை​யாற்​றியது. அப்​போது பாஜக மாநில தலை​வ​ராக இருந்த எல்​.​முரு​கன், கருப்​பர் கூட்​டத்​தின் செயலைக் கண்​டித்து தமி​ழ​கம் முழு​வதும் வேல் யாத்​திரை நடத்​தி​னார். அப்​போது ஆளும் கட்​சி​யாக இருந்த அதி​முக இதற்கு கெடு​பிடிகளை தந்த போதும் வேல் யாத்​திரை மூலம் முருக பக்​தர்​களை ஓரணி​யில் திரட்​டியது பாஜக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *