• July 4, 2025
  • NewsEditor
  • 0

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கெதிராக (ஜுலை 2) இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது.

முதல் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்தது போலவே, இந்த டெஸ்டிலும் பவுலிங்கை தேர்வு செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

அதன்படி, பேட்டிங் இறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.

சுப்மன் கில்

141 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த கேப்டன், இன்று தொடங்கிய இரண்டாம் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 311 பந்துகளில் டெஸ்ட் கரியரில் தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தார்.

முச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் 269 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் இந்த இரட்டை சதத்தின் மூலம் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார் கில்.

இரட்டை சதத்தால் கில் படைத்திருக்கும் சாதனைகள்!

* இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்திருக்கிறார். இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தில்ஷன் அதிகபட்சமாக 193 ரன்கள் அடித்திருந்தார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

* கடந்த இரண்டு தசாப்தங்களில் இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் கில். இதற்கு முன் கடைசியாக 2003-ல் தென்னாபிரிக்காவின் அப்போதைய கேப்டன் கிரீம் ஸ்மித் லார்ட்ஸ் மைதானத்தில் இரட்டைச் சதமடித்திருந்தார்.

* இங்கிலாந்தில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் (1979-ல் 221 ரன்கள் அடித்திருந்தார்) 45 வருட சாதனையை கில் (269) முறியடித்திருக்கிறார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

* கவாஸ்கர் (1979), டிராவிட் (2002) ஆகியோருக்குப் பிறகு இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த இந்திய வீரர் கில்.

* இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டில் இரட்டை சதமடித்த முதல் இளம் இந்திய கேப்டன் கில்.

* ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் கில் (269). இதற்குமுன் 254 ரன்களுடன் கோலி முதலிடத்தில் இருந்தார்.

* இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த ஏழாவது வெளிநாட்டு வீரர் கில்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *