• July 4, 2025
  • NewsEditor
  • 0

சிம்லா: இமாச்​சலபிரதேசம், மண்டி மாவட்​டத்​தின் பல்​வேறு இடங்​களில் கடந்த செவ்​வாய்க்​கிழமை 10 மேகவெடிப்​பு​கள், 3 திடீர் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு​கள் ஏற்​பட்​டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக், கர்​சோக் ஆகிய பகு​தி​களில் இருந்து 11 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில் மேலும் இரு​வரின் உடல்​கள் நேற்று மீட்​கப்​பட்​டதை தொடர்ந்து உயி​ரிழப்பு 13 ஆக அதி​கரித்​துள்​ளது. மேலும் 29 பேரை தேடும் பணி நடை​பெறுகிறது. இந்​தப் பேரிடரில் 162 கால்​நடைகள் இறந்​தன. மேலும் 50-க்​கும் மேற்​பட்ட வீடு​கள், 104 கால்​நடை கொட்​டகைகள், 31 வாக​னங்​கள், 14 பாலங்​கள் மற்​றும் பல சாலைகள் சேதம் அடைந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *